அழகுக்கு அழகு சேர்ப்போமா!!!!

Loading...

அழகுக்கு அழகு சேர்ப்போமா!!!!* அவகேடோவில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மேலும் சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன், பொலிவாக காணப்படும்.

* சர்க்கரை அல்லது உப்பு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

* சரும அழகை கூட்டுவதற்கு ஒரு சிறந்த வழி என்றால் ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுவது தான். இல்லையெனில், ஆரஞ்சு பழ தோலை அரைத்து முகத்திற்கு மாஸ்க் போடலாம்.

* தினமும் சரியாக தூங்குவதில்லையா? அப்படியெனில் அது முக அழகை கெடுக்கும். எனவே தவறாமல் தினமும் 8 மணிநேரம் நன்கு தூங்கி எழுந்தால், சருமம் அழகாக இருக்கும்.

* தினமும் காலையில் ஒரு கப் க்ரீன் டீயை குடித்து வந்தால், பொலிவான சருமம் கிடைக்கும். மேலும் க்ரீன் டீ போட்ட பின்னர், அந்த இலையை சருமத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாகும்.

* மீன் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் சால்மன் மீனை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அதனை சாப்பிட்டால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து, முகத்தின் அழகு கூடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply