அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய் பால்! | Tamil Serial Today Org

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய் பால்!

Loading...

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய் பால்!* முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் கலக்கல் சாறு ட்ரீட்மென்ட் தருவது எபப்டி? 1 ஸ்பூன் கேரட் சாறு மற்றும் 1 ஸ்பூன் தேங்காய்ப் பால் இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்துவரவேண்டும்.

* உங்கள் முகத்தை மெருகூட்ட ஒரு பளிச் பேக் இருக்கிறது. 1 ஸ்பூன் முல்தானி மட்டியும் 1 ஸ்பூன் தேங்காய்ப் பாலும் கலந்து முகத்துக்கு பேக் போடுங்கள். வாரம் ஒருமுறை இந்த பேக் போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானி மட்டி எடுத்துவிட, சருமத்தை தேங்காய்ப் பால் மிருதுவாக்கிவிடும்.

* முகத்தில் தோன்றும் கரும்புள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு அசத்தல் பேக் இருக்கிறது. 1 ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ், 1 ஸ்பூன் தேங்காய்ப் பால் மற்றும் 1 ஸ்பூன் பயத்த மாவு மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்து பேக் போடுங்கள். காய்ந்ததும் அலம்பிவிடுங்கள், வாரம் இருமுறை இந்த பேக் போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.

Loading...
Rates : 0
VTST BN