LG விரைவில் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

LG விரைவில் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகைப்பேசி சந்தையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள LG நிறுவனமானது LG Class எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இம்மாதம் 21 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது.
Android 5.1.1 Lollipop இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.5GHz வேகத்தில் செயல்படக்கூடிய Qualcomm Snapdragon 615 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply