Galaxy S6 Edge Plus – ன் சிறப்புகள் என்ன?

Loading...

Galaxy S6 Edge Plus - ன் சிறப்புகள் என்னஸ்மார்ட் போன்களின் சந்தையில் சாம்சுங் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது என்றே கூறலாம்.

தற்போது புதியாக Galaxy S6 Edge Plus மொபைலை அறிமுகம் செய்துள்ளது சாம்சுங் நிறுவனம்.

பிரமாண்டமான 5.7 இன்ச் தொடுதிரையுடன் அறிமுகமாகியுள்ள இந்த மொபைல் மேலும் பல வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.

இதன் 4 ஜிபி ராம் மூலம் பல்வேறு அப்ளிகேசனையும் கண்ணிமைக்கு வேகத்தில் நாம் இயக்க முடியும்.

ஆண்ட்ராய்ட் 5.1(Lollipop) வசதியும் இதற்கு துணை புரிகிறது.

மேலும் இதன் 16 மெகாபிக்சல் பின்பக்க கமெரா மூலம் துள்ளியமான காட்சிகளை பெறலாம்.

செல்பிக்கு என்றே 5 மெகாபிக்சல் முன்பக்க கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக 4k எனப்படும் மிக துள்ளியமான வீடியோக்களை நாம் எடுக்கமுடியும்.

மேலும் எடுத்த உடனேயே நொடிப்பொழுதில் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது.

அதிகமான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமிக்கும் வகையில் 32 ஜிபி மெமரி மொபைலுடனேயே வழங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply