2G தொழில்நுட்பத்தில் எவ்வாறு செயல்படுகிறது: பேஸ்புக் அப்ளிகேசனின் செயல்பாட்டை அறிய புதிய முயற்சியில் இறங்கிய நிர்வாகம்

Loading...

Facebookவளரும் நாடுகளில் பேஸ்புக்கின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் விதத்தில் தனது ஊழியர்கள் மூலமாக அந்நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
பேஸ்புக்கின் பயன்பாடு வியக்கத்தக்க அளவில் பெருகியுள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 500 மில்லியனாக உள்ளது.

250 மில்லயன் மக்கள் இதனை தங்களது ஸ்மார்போனில் பயன்படுத்துகின்றனர். வளர்ந்த நாடுகளில் உள்ளோர் இதனை 3G மற்றும் 4G தொழில்நுட்பத்தின் மூலமாக வேகமாக பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் வளரும் நாடுகளான இந்தியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் இந்த அப்ளிக்கேசனை பயன்படுத்தும்போது ஏற்படும் குறைப்பாடுகள் என்னென்ன என்பதை ஆராய்வதற்காக அந்நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

அதன்படி கலிபோர்னியாவில் அமைந்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் வாரத்தில் செவ்வாய் கிழமை மட்டும் சுமார் ஒரு மணி நேரம் 2G தொழில்நுட்பத்தில் பேஸ்புக் அப்ளிகேசனை பயன்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் 2G தொழில்நுட்பத்தில் பயன்படுத்தும் போது இந்த அப்ளிக்கேசனின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பற்றி ஊழியர்கள் நன்றாக அறிந்துகொள்ள முடியும் என்றும் மேற்கொண்டு என்ன வசதிகளை மேம்படுத்தலாம் என்பது பற்றி அறிந்துகொள்ள உபயோகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply