ரசம்

Loading...

ரசம்துவரம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகு – அரைத்தேக்கரண்டி
சீரகம் – அரைத்தேக்கரண்டி
மிளகாய் – நான்கு
மல்லிவிதை – ஒரு தேக்கரண்டி
புளி – சிறு எலுமிச்சை அளவு
உப்பு – ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கடுகு – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

துவரம் பருப்பு, மிளகு, சீரகம், மிளகாய், மல்லி விதை ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து அப்படியே பொடி செய்து கொள்ளவும்.
புளியைக் கரைத்து எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் உப்பு மற்றும் அரைத்த பொடியைச் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். ரசம் கொதி வந்ததும் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
கொதித்ததும் இறக்கி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லித் தழையினைத் தூவவும்.

Loading...
Rates : 0
VTST BN