பழக்கலவை சாலட்

Loading...

பழக்கலவை சாலட்பால் – அரை லிட்டர்
சீனி – 150 கிராம்
வெனிலா கஸ்டர்ட் பவுடர் – 3 தேக்கரண்டி
ஆப்பிள் – ஒன்று
வாழைப்பழம் – ஒன்று
பலாச்சுளை – 3
மாதுளை – பாதி
திராட்சை – அரை கப்
வறுத்த முந்திரி – கால் கப்
மாம்பழம் – ஒன்று

ஒரு கிண்ணத்தில் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு அதனுடன் சிறிது சீனியை தூவி பிரிட்ஜில் வைக்கவும்.
பாலை காய்ச்சி விட்டு அதனுடன் கஸ்டார்ட் பவுடர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதி வந்ததும், தீயை குறைத்து வைத்து திக்காகும் வரை கிளறவும்.
திக்கானதும் இறக்கி வைத்து அதனுடன் சீனியை போட்டு ஆற வைத்து, நன்கு ஆறியதும் பிரிட்ஜில் வைக்கவும்.
பரிமாறும் பொழுது ஒரு கிண்ணத்தில் முதலில் கண்டென்ஸ்ட் மில்க்கை ஊற்றி, பிறகு வெட்டி வைத்த பழங்களை போட்டு அதனுடன் முந்திரி, திராட்சை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN