தக்காளி மசாலா

Loading...

தக்காளி மசாலாதக்காளி – 12
பெரிய வெங்காயம் – 4
நெய் – 100 கிராம்
கொத்துமல்லி – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – அரைத் தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 4
இஞ்சி – சிறிய துண்டு
சீரகம் – ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் – ஒரு தேக்கரண்டி
சர்க்கரை – 2 தேக்கரண்டி

தக்காளியை சிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
கொத்துமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டுக் காய்ந்தவுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
இதனுடன் சீரகம், தக்காளிச் சேர்த்து பதினைந்து நிமிடங்கள் வேகவிடவும்.
பின்னர் மீதி உள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
கலவை கெட்டியாக வரும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN