செயற்கையான முறையில் மிகப் பெரிய அலையினை உருவாக்கி சாதனை

Loading...

செயற்கையான முறையில் மிகப் பெரிய அலையினை உருவாக்கி சாதனைகடலில் இயற்கையாக ஏற்படும் அலைகள் மிகவும் இராட்சத உயரம் கொண்டவையாக இருக்கும்.
ஆனால் செயற்கையான முறையில் இவற்றுக்கு ஒப்பான உயரம் கொண்ட அலைகளை உருவாக்குவது மிகவும் கடினம்.

எனினும் நெதர்லாந்திலுள்ள Deltares எனும் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செயற்கையான முறையில் இதுவரை உருவாக்கப்பட்ட அலைகளையும் விட உயரம் கூடிய அலையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இதற்காக 9 மில்லயன் லீற்றர் நீரைக் கொள்ளக்கூடியதும் செக்கனுக்கு 1,000 லீற்றர் நீரை வெளியேற்றக்கூடியதுமான மிகப் பெரிய கொங்கிரீட் நீர்த்தாங்கியில் நீரை நிரப்பி செயற்கையாக வடிவமைக்கப்பட்ட 300 மீற்றர் நீளமான ஓடை ஒன்றினுள் நீரை பாய்ச்சியுள்ளனர்.

இதன்போது 10 மீற்றர்கள் உயரம் வரை எழுந்துள்ளது.

Loading...
Rates : 0
VTST BN