உருளைக்கிழங்கு மசாலா சிப்ஸ்

Loading...

உருளைக்கிழங்கு மசாலா சிப்ஸ்உருளைக்கிழங்கு – கால் கிலோ
வெந்தயம் – கால் தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
மிளகாய் – 4
கடுகு – ஒரு தேக்கரண்டி
புளி – எலுமிச்சம் பழ அளவு
கொத்தமல்லித் தழை – சிறிதளவு

உருளைக்கிழங்கை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து தோலைச் சீவி மெல்லிய துண்டுகளாக நீளவாட்டில் நறுக்கவும்.
அதன் பிறகு வெந்தயம், மிளகாய், கடுகு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு புளியையும் சேர்த்து அரைக்கவும். (தண்ணீர் விட வேண்டாம்)
வாணலியில் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் உப்புப்பொடி சேர்த்த பின் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லியை நறுக்கித் தூவவும்.

Loading...
Rates : 0
VTST BN