இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்!

Loading...

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்!அதிகமான வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்து இறுதியில் மாரடைப்பு ஏற்படுகிறது.
ஆகவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில வகை உணவுகளை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்

இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.

ஏனெனில் வாழைப்பழத்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை சிறுநீரகத்தில் இரத்தத்தை சுத்திகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள சோடியத்தை வடிகட்டிவிடும் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக இருக்க உதவுகிறது.

தர்பூசணி

கோடையில் கிடைக்கும் தர்பூசணி புத்துணர்ச்சி கொடுப்பது மட்டுமின்றி, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

ஏனெனில் தர்பூசணியில் நார்ச்சத்து, லைகோபைன்(Lycopene), வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்திற்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது.

எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸோ குடித்து வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகமாகவும் உள்ளது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பொட்டாசியம் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை இரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கும்.

திராட்சை ஜூஸ்

தினமும் 2 டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பாலிபீனால்ஸ்(Polyphenols) இரத்த நாளங்களை தளரச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். மேலும் இதில் கலோரிகள் இல்லாததால், இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.

கேரட்

தினம் ஒரு கேரட்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

Loading...
Rates : 0
VTST BN