ஹேக்கர்களின் தாக்குதலுக்கு இலக்காகியது மற்றுமொரு பிரபலமான இணையத்தளம்

Loading...

ஹேக்கர்களின் தாக்குதலுக்கு இலக்காகியது மற்றுமொரு பிரபலமான இணையத்தளம்அண்மைக்காலமாக இணையத்தளங்கள் மீதான ஹேக்கர்களின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகின்றன.
இவற்றில் Ashley Madison எனும் இரகசிய காதலர்களை உருவாக்கும் தளத்தின் மீதான சைபர் தாக்குதல் அண்மையில் உலகளாவிய ரீதியில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இதனை அடுத்து தற்போது Patreon எனப்படும் நிதிதிரட்டலுக்கான இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இத்தளத்திலிருந்து பெயர்கள், முகவரிகள், நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் என ஏறத்தாழ 15 GB வரையான தரவுகள் திருடப்பட்டுள்ளன.

இதில் ஏறத்தாழ 2.3 மில்லியன் மின்னஞ்சல் முகவரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தின் ஊடாக பல்வேறு கலைஞர்கள் தமது புதிய திட்டங்களை பிரசுரிக்க அதற்கான நிதியினை மக்கள் நன்கொடையாக வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply