ஸ்மார்ட்வாட்ச்சில் ஹேக்கிங்! ஆராய்ச்சியாளரின் அதிர்ச்சி தகவல் | Tamil Serial Today Org

ஸ்மார்ட்வாட்ச்சில் ஹேக்கிங்! ஆராய்ச்சியாளரின் அதிர்ச்சி தகவல்

Loading...

ஸ்மார்ட்வாட்ச்சில் ஹேக்கிங்! ஆராய்ச்சியாளரின் அதிர்ச்சி தகவல்புதிதாக ஸ்மார்ட்வாட்ச் கருவிகளை வாங்குபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி இந்திய ஆராய்ச்சியாளர் ரோமித் ராய் சவுத்ரி என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இல்லினியோஸ் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருப்பவர் ரோமித் ராய் சவுத்ரி. இவர் பொதுவாக மற்ற கணனி சார்ந்த கருவிகளுடன் ஒப்படும் போது ஸ்மார்ட்வாட்ச் கருவிகளை ஹேக் செய்வது மிகவும் எளிமையான காரியம் என்கிறார்.

மேலும், இவர் தான் உருவாக்கியிருக்கும் செயலியை சாம்சங் ‘கியர் லைவ்’ ஸ்மார்ட்வாட்ச் கருவியில் நிறுவி, ஸ்மார்ட்வாட்ச்சின் மோஷன் சென்சார்களை கொண்டு வாடிக்கையாளர்களின் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

இந்த செயலி அக்செல்லோமீட்டர் மற்றும் கைரோஸ்கோப்பை பயன்படுத்தி வாடிக்கையாளர் கருவியின் கீபோர்டில் என்ன டைப் செய்கின்றார் என்பதை ட்ராக் செய்கிறது.

‘மோஷன் லீக்ஸ் த்ரூ ஸ்மார்ட்வாட்ச் சென்சார் (Motion Leaks through Smartwatch Sensors)’ எனும் இந்த திட்டத்தின் மூலம் ஸ்மார்ட்வாட்ச் கருவியில் உள்ள முக்கியமான தகவல்களை எடுக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN