ஸ்டஃப்டு வெண்டைக்காய்

Loading...

ஸ்டஃப்டு வெண்டைக்காய்வெண்டைக்காய் – 250 கிராம்
கடலைமாவு – நான்கு மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் – கொஞ்சம்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – கொஞ்சம்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – இரண்டு
பூண்டு – 2 பல்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு துண்டு
தனியாப்பொடி – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் – 6 மேசைக்கரண்டி
சீரகப்பொடி – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

வெண்டைக்காய் காம்பை நறுக்கிய பிறகு காயைக் கீறி வைத்துக் கொள்ள வேண்டும். சற்று நீளமாக ஒரு பக்கமாக கீறவும்.
பூண்டு, தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், இவற்றை அரைத்து கடலை மாவுடன் நன்றாகக் கலக்கவும்.
உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு முதலியவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.
வெண்டைக்காய்குள் இக்கலவையை பிளந்துவிடாத படி அடைக்கவும். விதைகள் உள்ளே முற்றியிருந்தால் எடுத்துவிடலாம்.
எண்ணெய் விட்டு வெண்டைக்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். கரகரப்பாக இருக்கும்படியும் எடுக்கலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply