வோர்ட் லென்ஸ் என்னும் வழிக்காட்டி நண்பன்

Loading...

வோர்ட் லென்ஸ் என்னும் வழிக்காட்டி நண்பன்நாம் எங்காவது மொழி தெரியாத ஊர்களுக்கு சென்றால் விலாசம் கூட கேட்க முடியாமல் திணறிப்போவோம். ஒரு வேளை நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு எப்படி போவது என்று எங்காவது எழுதப்பட்டிருந்தாலும் மொழி தெரியாமல் அலைந்துகொண்டிருப்போம. அப்படிப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் வோர்ட் லென்ஸ்(Word Lens).
அமெரிக்காவை சேர்ந்த கியூஸ்ட் விஷுவல் என்ற நிறுவனம் இணைய வசதி இல்லாமலேயே ஒரு மொழியில் உள்ள வாசகங்களை மற்றொரு மொழிக்கு மாற்றும் மென்பொருளை கண்டுப்பிடித்தது.

எடுத்துக்காட்டாக, நீங்கள் சாலையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். அப்போது ஒரு பலகையில் இந்தியில் எழுதப்பட்டுள்ளது.

அந்த வாசகத்தை நீங்கள் புகைப்படம் எடுத்தால் நீங்கள் விரும்பிய மொழியில் அந்த வாசகத்துக்கு அர்த்தம் கிடைக்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மென்பொருளுக்கு அந்நிறுவனம் வைத்த பெயர்தான் வோர்ட் லென்ஸ்.

இந்நிலையில் வேர்ட் லென்ஸ் மென்பொருளை தங்களுடன் இணைத்துகொள்வதற்காக கூகுள் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் கியூஸ்ட் விஷுவல் நிறுவனத்தை வாங்கியது.

பின்னர் தனது கூகுள் மொழிமாற்றி (Google Translate) மென்பொருளில் வோர்ட் லென்சை இணைத்துகொண்டு பல்வேறு மொழிகளை இலவசமாக மாற்றிகொள்ளும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு தந்தது.

முதலில் ஸ்பானிஸ் மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஸ் மொழிக்கும் மொழி பெயர்க்கும் வகையிலேயே இது வடிவமைக்கப்பட்டது.

தற்போது 27 மொழிகளை மொழிபெயர்க்கும் வகையில் இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply