வேர்க்கடலை பிஸ்கட்கள்

Loading...

வேர்க்கடலை பிஸ்கட்கள்மைதா மாவு – 140 கிராம்
பொடித்த சர்க்கரை – 85 கிராம்
வெண்ணெய் அல்லது மார்கரீன் – 85 கிராம்
உப்பு – கால் தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – கால் தேக்கரண்டி
வேர்க்கடலை ஒன்றும் இரண்டுமாக பொடி செய்தது – 100 கிராம்
முட்டை – ஒன்று
வெனிலா எசன்ஸ் – சில துளிகள்

மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து சலிக்கவும்.
சர்க்கரை, வெண்ணெயை நன்றாகக் குழைக்கவும்.
முட்டையையும் சேர்த்து சிறிது அடித்து எசன்ஸ் சேர்க்கவும்.
மைதா மாவு, வேர்க்கடலையின் முக்கால் பாகத்தையும் குழைத்த கலவையில் சேர்க்கவும்.
பிறகு கலவையை சிறு எலுமிச்சம் பழ அளவு பந்துகளாக்கி மீதி வேர்கடலையில் புரட்டி எடுக்கவும்.
தட்டில் வரிசையாக இடைவெளி விட்டு வைக்கவும்.
350 டிகிரி F சூட்டில் சுமார் 15 இருந்து 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply