வெள்ளை பூண்டின் அற்புதங்கள்

Loading...

வெள்ளை பூண்டின் அற்புதங்கள்பூண்டு என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது இதயத்திற்கு சிறந்த உணவுப் பொருள் என்பதுவே.

இதுமட்டுமின்றி ஏராளமான மருத்துவ குணங்களும் புதைந்து கிடக்கின்றன.
புற்றுநோயை தடுக்கும்
வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அல்லில் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
குறிப்பாக இரைப்பை புற்றுநோயை தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
தினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் பக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கும், மொத்தத்தில் நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதய நோய்களை தடுக்கும்
மாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்னைகளில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது.
இதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.
அதுமட்டுமின்றி கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.
தொண்டை பிரச்னைகளுக்கு குட்பை
பூண்டில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பொருட்கள், தொண்டை பிரச்னைகளிலிருந்து விடுவிக்கிறது.
தொண்டை எரிச்சல்களை குணப்படுத்துவதுடன், சுவாச பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது.
மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
பல்வலியை போக்கும்
பூண்டில் உள்ள பக்டீரியா எதிர்ப்பி மற்றும் வலி நிவாரணி குணங்கள் பல்வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
இருப்பினும் ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply