வெள்ளரி லெஸி

Loading...

வெள்ளரி லெஸிநறுக்கின வெள்ளரிக்காய் – அரை கப்
தயிர் – அரை கப்
சீனி – 2 மேசைக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை

வெள்ளரிக்காய் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

மிக்ஸியில் இந்த வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு தயிர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

அரைத்த வெள்ளரிக்காயுடன் சீனி மற்றும் உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுக்கவும்.

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வெள்ளரி லெஸி ரெடி. இதனுடன் ஐஸ்கட்டிகள் சேர்த்து ஜில்லென்று பருகுலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply