வெயிலில் உங்கள் அழகை பாதுகாக்க !!

Loading...

வெயிலில் உங்கள் அழகை பாதுகாக்க !!தர்பூசணி பழ ஜூஸ் 10மில்லி, மோர் 10மில்லி இரண்டையும் கலந்து, அதில் காட்டன் துணியை நனைத்து எடுத்து முகத்தின் மீது படரவிடவும். பத்து நிமிடகளுக்கு பின் துணியை எடுத்துவிட்டு குளிர்த நீரால் முகத்தை கழுவினால் வெயிலால் ஏற்பட்ட கருமை போய் முகம் பொலிவாகும்.
சூரியகாந்தி விதை 1 ஸ்பூன் எடுத்து, இதை பாலில் மூழ்குமளவு இரவே ஊறவைத்து, மறுநாள் அரைத்து, அதனுடன் புதின சாறு 10 சொட்டுகள் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
சாத்துக்குடி ஜூஸ் 2 ஸ்பூன், ரோஸ் வாட்டர் 2 ஸ்பூன், பொடித்த கற்பூரம் 1 சிட்டிகை அனைத்தையும் கலந்து பஞ்சில் தொட்டு முகத்தை ஒற்றி எடுக்கவும். சரும துவாரங்கள் மூடி எண்ணை வழியாமல் இருக்கும்.
பார்லி பொடி 2 ஸ்பூன் எடுத்து 25 மில்லி தண்ணிரில் கலந்து கஞ்சியாக கொதிக்க வைத்து, அதில் 10 சொட்டுகள் தேனும், எலுமிச்சை சாறும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
சோள மாவு 1 ஸ்பூன், மோர் கால் ஸ்பூன், பன்னிர் கால் ஸ்பூன் இவற்றை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால், எண்ணைபிசுக்கு உடனடியாக போய் விடும் முகம் பொலிவாகும். இந்த மேக்கப் போட்ட பிறகு மேக்கப் போட்டுக்கொண்டால் குறைந்தது 6 மணி நேரத்திற்கு முகத்தில் மேக்கப் கலையாமல் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply