வெந்தயக் கீரை சப்பாத்தி

Loading...

வெந்தயக் கீரை சப்பாத்திகோதுமை மாவு – அரை கப்
வெந்தயக்கீரை – கால் கப்
உப்பு – 2 சிட்டிகை

தேவையானப் பொருள்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஆய்ந்த வெந்தயக்கீரை, உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.

அதனுடன் கொதிக்க வைத்த தண்ணீரை(தேவையான அளவு) சிறிது சிறிதாக ஊற்றி மிருதுவாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

மாவு ஊறியதும் எடுத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்க்கவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி அதில் தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை போட்டு உடனே திருப்பி போட்டு மேலே எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.

சத்தான வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply