வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்.

Loading...

வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்.காய்கறி வகைகளில் ஒன்றான, வெண்பூசணிக்காயில் மறைந்திருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் நலத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.
வெண்பூசணியின் மருத்துவ குணங்கள் :
வெண்பூசணிக்காவை சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும்.
சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.
புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.
பூசணிக்காய் திருஷ்டி கழிப்பதற்கு மட்டுமல்ல, திடமான உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம்.
வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, இறைப்பு நோய் ஆகியவற்றுக்கு மருந்தாவதோடு சிறுநீரக மற்றும் இன உறுப்புகளில் ஏற்படும் நோய்களையும் போக்கவல்லது.
வெண் பூசணிப் பூவை மஞ்சள் காமாலை நோயைப் போக்கவும், சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.
வெண்பூசணி வேரை, மஞ்சள் காமாலை மற்றும் சிறுநீர் பையின் கீழ்பகுதியில் அடைப்போ அல்லது எரிச்சலோ ஏற்பட்டு கடுமையான வலியையும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வையும் ஏற்படுத்துகிற நிலையில் உபயோகப்படுத்துகின்றனர்.
வெண்பூசணிக் கொடியின் தண்டு, வெந்நீரினாலோ நீரின் ஆவியினாலோ ஏற்பட்ட கொப்புளங்களை ஆற்றுவதற்குப் பயன்படுகிறது.
இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சத்துக்கள் புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply