வெண்டைக்காய் கறி

Loading...

வெண்டைக்காய் கறிவெண்டைக்காய் – அரை கிலோ
உளுத்தம்பருப்பு – 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 மேசைக்கரண்டி
தனியா – 2 மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல் – 4
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
கடுகு – அரைத் தேக்கரண்டி
மஞ்சத்தூள் – அரைத் தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
நாட்டுச் சர்க்கரை – அரைத் தேக்கரண்டி
உப்பு – ஒன்றரை தேக்கரண்டி

வெண்டைக்காயை நன்கு கழுவி ஈரம் போக வடியவிட்டு பின்பு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், வெந்தயம், பெருங்காயத் தூள் இவற்றை வாணலியில் எண்ணெய் இல்லாமல் சற்று வறுத்து பின்பு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு காயவிடவும். காய்ந்தபின் ஒரு தேக்கரண்டி கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.
வெடித்த பிறகு நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு அத்துடன் அரை தேக்கரண்டி மஞ்சத்தூள், அரைத்தேக்கரண்டி வெல்லம், ஒன்றரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி கெட்டியான புளித்தண்ணீர் எல்லாவற்றையும் போட்டு நன்றாக கலக்கி மூடி வைக்கவும்.
காய் நன்றாக வெந்தபிறகு அரைத்து வைத்துள்ள கறிப்பொடியை அதில் போட்டு, கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டு நன்றாக கிளறி சிறிது நேரத்தில் கீழே இறக்கிவிடவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply