வெஜிடபிள் ரைஸ்

Loading...

வெஜிடபிள் ரைஸ்பச்சரிசி – 250 கிராம்
பட்டை – 2
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
முட்டைகோஸ் – கால் கிலோ
காரட் – கால் கிலோ
பீன்ஸ் – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 2
நெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

முதலில் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.
கொதித்த தண்ணீரில் அரிசியை களைந்து போட வேண்டும். பிறகு குக்கரில் வைத்து 3 விசில் வரை வேக விட வேண்டும்.
அதன் பின் முட்டைகோஸ், காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடிப் பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து தீயைச் சிறிதாக வைத்து மூடி விட வேண்டும்.
காய்கறி நன்றாக வெந்தபின் குக்கரில் உள்ள சாதத்தை எடுத்து நெய் சேர்த்து, காய்கறிகளையும் எடுத்து கலக்க வேண்டும்.
கலந்து பிறகு பரிமாறவும். இதற்கு தக்காளி குருமா சைட் டிஸ்சாக வைத்துக் கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply