வெங்காய டோக்ளா

Loading...

வெங்காய டோக்ளாகடலைப்பருப்பு – அரை கிலோ
பச்சைபயிறு – 10 கிராம்
சின்ன வெங்காயம் – அரை கப்
பச்சைமிளகாய் – 4
தேங்காய் – அரை கப் துருவியது
கடுகு – தாளிக்க
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – கால் கப்

கடலைப்பருப்பு, பச்சைப்பயறு இவற்றை கல்நீக்கி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் தண்ணீரை முழுவதும் வடிகட்டி விட வேண்டும்.
பின் தண்ணீர் அதிகம் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், சமையல் சோடா, உப்பு முதலியவற்றை மாவுடன் சேர்த்து வாயகன்ற தட்டில் பரப்பி 10 நிமிடம் வேக விடவும்.
வெந்ததும் சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை போட்டுத் தாளிக்கவும்.
கடுகு வெடித்தவுடன் டோக்ளாக்களைப் போட்டு பொன் நிறமாக மாறியதும், கறிவேப்பிலை தூவி இறக்கி வைத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply