வெங்காயத்தாள் பருப்பு பொரியல்

Loading...

வெங்காயத்தாள் பருப்பு பொரியல்வெங்காயத்தாள் – ஒரு கட்டு
பாசிபருப்பு – கால் கப்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
கடுகு
கறிவேப்பிலை
எண்ணெய்

வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பாசிபருப்பை மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.

அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.

இரண்டும் ஒன்றோடொன்று கலந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுலபமாக விரைவில் செய்யக் கூடிய வெங்காயத்தாள் பாசி பருப்பு பொரியல் தயார்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN