விரைவில் வருகிறது Android Marshmallow | Tamil Serial Today Org

விரைவில் வருகிறது Android Marshmallow

Loading...

விரைவில் வருகிறது Android Marshmallowகூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளமானது தற்போது அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுவருவது அனைவரும் அறிந்ததே.
இவ் இயங்குதளத்தின் ஒவ்வொரு பதிப்பினையும் அந் நிறுவனம் உணவுப் பண்டங்களின் பெயர்களைப் பயன்படுத்தி அறிமுகம் செய்து வந்தது.

இந்நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள அன்ரோயிட் 6.0 பதிப்பிற்கு Android Marshmallow அல்லது Android M (அன்ரோயிட் மாஸ்மலோ) என பெயரிட்டுள்ளது.

தற்போது சோதனையில் இருக்கும் இவ் இயங்குதளப் பதிப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், முன்னைய பதிப்பில் காணப்பட்ட தவறுகளும் நீக்கப்பட்டுவருகின்றன.

இப்பதிப்பானது இன்னும் சில மாதங்களில் மொபைல் சாதனங்களில் தவழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading...
Rates : 0
VTST BN