வியப்பில் ஆழ்த்தும் சூரியனின் புதிய படத்தை வெளியிட்டது நாசா

Loading...

வியப்பில் ஆழ்த்தும் சூரியனின் புதிய படத்தை வெளியிட்டது நாசாஅமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சூரியனின் வித்தியாசமான தோற்றத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது.

இப்படமானது சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையமானது சூரியனின் முகப்பு பக்கத்தை செக்கனுக்கு 8 கிலோ மீற்றர்கள் எனும் வேகத்தில் கடந்து செல்லும்போது இக் காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப் புகைப்படமானது நாசாவில் பணியாற்றும் தலைமை புகைப்படவியலாளரான Bill Ingalls என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ் வருட ஆரம்பத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சூரியனைக் கடந்து செல்லும் வேளையில் ஏற்பட்ட கிரகணத்தை Thierry Legault என்பவர் படம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply