வாழைப்பழ பக்கோடா

Loading...

வாழைப்பழ பக்கோடாவாழைப்பழம் – 2
கடலை மாவு – 4 மேசைக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – சிறிது

கடலை மாவுடன் பெருங்காயம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் கலந்து இட்லி மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
வாழைப்பழத்தைத் தோலுரித்து அரை அங்குல கனத்திற்கு வட்டமான துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
கரைத்த மாவில் வாழைப்பழத் துண்டுகளை தோய்த்து எடுத்து வாணலியில் கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply