வாழைக்காய் வறுவல்

Loading...

வாழைக்காய் வறுவல்சிறிய வாழைக்காய் – மூன்று
எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
அரைக்க:
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பூண்டு – மூன்று பல்
சின்ன வெங்காயம் – இரண்டு
உப்பு – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்

அரைக்க வைத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். வாழைக்காயை தோல் நீக்கி சற்று கனமான துண்டுகளாக நறுக்கவும்.
அரைத்த விழுதை வாழைக்காய்த் துண்டுகளில் பிரட்டி பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு வாழைக்காய் துண்டுகளை போட்டு பிரட்டவும்.
அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி பத்து நிமிடம் வேக வைக்கவும்.
நன்றாக வெந்து சிவந்ததும் இறக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply