வாழைக்காய் பொரியல்

Loading...

வாழைக்காய் பொரியல்வாழைக்காய் – 2
மிளகாய் வற்றல் – 8
மல்லிவிதை – அரைத் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – அரைத் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 250 கிராம்
உப்பு – தேவையான அளவு

வாழைக்காய்களை தோல் நீக்கி, நீளவாக்கில் நான்கு துண்டுகளாக வெட்டி, அதன் பிறகு அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
ஒரு வாணலியில் 200 கிராம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்து நன்கு ஆறவிடவும்.
பிறகு மிளகாய் வற்றல், மல்லிவிதை, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வாணலியில் போட்டு வறுத்து எடுத்து பரபரப்பாகப் பொடி செய்து கொள்ளவும்.
புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வறுத்த வாழைக்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு குறைந்த வேகத்தில், சிறிது இடைவெளி விட்டு விட்டு, ஒன்றிரண்டாக அடித்துக் கொள்ளவும்.
வாணலியில் ஐந்து தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து சிவக்க வதக்கவும்.
வெங்காயம் வதங்கியபின், வாழைக்காய்த் துண்டுகள், பொடி செய்த மசாலா, கரைத்த புளி, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும்.
மிதமான தீயில் வைத்து சிவக்க வதங்கிய பின் இறக்கி வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply