வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடுங்கள்: காபி குடிப்பதை தவிர்த்துவீட்டீர்களா?

Loading...

வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடுங்கள் காபி குடிப்பதை தவிர்த்துவீட்டீர்களாபலருக்கும் உள்ள தயக்கம் தினமும் முட்டை சாப்பிடலாமா என்பது தான்.
ஆனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையை தினமும் எடுத்துக் கொள்வது மூலம் உடலுக்கு பல ஆரோக்கியமான பலன்கள் கிடைக்கிறது.

* தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவை முட்டையில் உண்டு.

* இதில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் உள்ளன.

* தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் வாயிலாக, குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

* முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்ஸ்(Antioxidants), கண்பார்வையை தெளிவாக்கும்.

* இதயக்கோளாறு மற்றும் பக்கவாத நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

* தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்புக்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது.

* வாரத்துக்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

* 45 வயதை தாண்டியவர்கள், முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உண்டு விட்டு, மஞ்சள் கருவை தவிர்த்து விடுவது நல்லது.

காபி குடிப்பதை நிறுத்திவிட்டால் இதனை மேற்கொள்ளுங்கள்!

காபிக்கு அடிமையாக இருப்பவர்களுக்கு உடல்நடுக்கம், படபடப்பு, டென்ஷன் ஆகியவை இருக்கும். ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். அவர்களின் தூக்கமும் பாதிக்கப்படும்.

ஆகையால் இந்த பாதிப்பு உள்ளவர்கள் காபி அதிகமாக குடிப்பை தவிர்த்து விடுவது நல்லது. இதற்கு பதிலாக நிறைய நீர் குடியுங்கள்.

* காலையில் காபி குடிக்கும் நேரத்தில் வெது வெதுப்பான நீர் குடியுங்கள்.

* தலைவலி ஏற்படாது இருக்க மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* அதிக சோர்வு இருந்தால் நிறைய நேரம் தூங்குங்கள்

* வைட்டமின் ‘சி’ மாத்திரையினை மருத்துவ ஆலோசனையோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

* சோர்வினை நீக்க நல்ல உடற்பயிற்சி செய்யுங்கள்.

* குறைந்தது 20 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

* 1-3 கப் க்ரீன் டீ பருகுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply