வயிற்று புண்ணுக்கு அருந்த வேண்டிய உணவுகள்

Loading...

வயிற்று புண்ணுக்கு அருந்த வேண்டிய உணவுகள்பெரும்பாலும் வயிற்றுப் புண்ணில் ஏ.எச் பைலோரி என்ற பாக்டீரியா உள்ளது. அதனால் ஏ.எச் பைலோரி கிருமியை அழிக்கின்ற சிகிச்சைகளை முதலில் செய்ய வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்:

நன்றாக வேக வைத்த சாதம், கஞ்சி, மோர் சாதம்
இட்லி (காரமில்லாத சட்னியுடன்) கீரைகள்,காய்கறிகள்
புளிப்பில்லாத பழங்கள்:- ஆப்பிள் சாத்துகுடி, பப்பாளி.
பொதுவாக புளிப்பும் காரமும் இல்லாத திரவ உணவுகள் நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

காரம், மசாலாப் பொருட்கள்
காபி, டீ, புகையிலை, மதுபானங்கள்
எண்ணெய் பொருட்கள் (பொரித்த உணவுகள்)
பால்கட்டி
கடினமான தானியங்கள்
மாமிச உணவுகள்

அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிறவர்களுக்கும், பெரிய பெரிய துண்டுகளாகவும், கவளங்களாகவும் உணவை விழுங்குபவர் களுக்குமே செரிமானக் கோளாறுகள் வரும்.

உணவு ஜீரணிக்காமல் இருக்கும்போதே மீண்டும் மீண்டும் சாப்பிடக்கூடாது. இதனால் கழிவுகளும் வெளியேறாமல் இருந்து, வயிற்று மந்தத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. உணவு ஜீரணமாகாமல் இருந்தால் அடுத்த வேளை பட்டினியாக இருப்பது நல்லது.

உணவு சாப்பிட்ட பிறகு வேகமாக மூச்சு வாங்குதல், ஏப்பம், நெஞ்செரிச்சல், பசியின்மை, அதிகமாக காற்று வெளியேறுதல், வாய்க்கசப்பு முதலியன செரிமானக் கோளாறின் அறிகுறிகள்.

செரிமாணக் கோளாறு உள்ளவர்கள் குறை வாகவே சாப்பிட வேண்டும். நன்றாக மென்றபிறகே அடுத்தடுத்து ஒவ்வொரு கவளமாக எடுத்துச் சாப்பிடலாம். உணவுகள் எளிதில் செரிமானமாக சம்பா ரவை, முளை விட்ட கோதுமை, இட்லி போன்ற கார்போ ஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிடலாம்.

மூன்று வேளையும் அசைவம் சாப்பிடும் பழக்கமுள்ளோர், பார்லி கஞ்சி, மொச்சை கொண்டைக் கடலை, சுண்டல், கீரை வகை போன்றவற்றை சேர்த்தால் சீரணக் கோளாறு குறையும்.

பசிக்கவே இல்லை: சாப்பிட்டது அப்படியே வயிற்றில் இருக்கிறது என்பவர்கள் அடுத்த மூன்று வேளையும் மோர், அரிசிக்கஞ்சி, சாதம், ராகிக் கஞ்சி அருந்தினால் போதும்.

எண்ணெயில், வறுக்கிற உணவுகள் முற்றிலுமாக கெடுதலானவை. அதில் அனைத்து வைட்டமின்களும் புரோட்டினும் வீணாகின்றன. அது மட்டுமில்லாமல் தேவையில்லாத தீய கொழுப்புகளே அதிகமாக சேர்ந்து இதயத்தைப் பாதிக்கும். வறுத்த உணவுகளான போன்டா, பஜ்ஜி, வடை போன்ற உணவுகள் இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கும்.

மாவுப்பொருட்களுக்கு(கார்போ ஹைட்ரேட்) வாயிலேயே சீரணம் தொடங்குகிறது. புரதப் பொருட்களுக்கு இரைப்பையில் தொடங்குகிறது. கொழுப்பு பொருட்களுக்கு முன் சிறு குடலில் சீரணம் தொடங்குகிறது.

உணவை நுகர்ந்து நன்றாக பிசைந்து, வாயில் மென்று, எச்சிலில் நன்றாக கூழாக்கிய பிறகே விழுங்க வேண்டும். ஒரு கவள உணவை 20 முறை மென்று அசை போட்டு விழுங்க வேண்டும்.

சாப்பிடும் வேளையில் உணவை 20 நிமிடங்களுக்குமேல் மெதுவாக சாப்பிட்டால்தான், சரியான அளவு உணவில், பசி உணர்வு அடங்கி வயிறு நிறைந்த திருப்தி ஏற்படும். அவசரமாக உணவை அள்ளிக் கொட்டினால் அதிகமான உணவை சாப்பிட்டாலும் பசி அடங்காது. அசீரணம் ஏற்படும்.

வயிறு புடைக்க சாப்பிடக் கூடாது. பசி அடங்கிய உணர்வு ஏற்பட்டதும் வயிற்றில் காலி இடம் வைத்து சாப்பிட வேண்டும். குறிப்பாக இரவில் அரை வயிற்றுக்கு சாப்பிடுவது சரியானது. உணவை சாப்பிடுவதில் குறிப்பிட்ட நேரத்தை கடைப்பிடித்தால் இயல்பான ஜீரணம் நடைபெற உதவும்.

சிக்கலான மலச்சிக்கல்

மலச்சிக்கலும் வயிற்றுப் போக்கும் மாறிமாறி வந்தால்
மலம் கழிப்பதில் இரத்தக் கசிவு ஏற்பட்டால்
நாளுக்கு நாள் அதிகமாகின்ற மலச்சிக்கல்
இரத்த சோகையுடன் மலச்சிக்கல்
வயதானவர்களுக்கு மலச்சிக்கல்
மூலநோய் அல்லது ஆசனவாய் வெடிப்புடன் மலச்சிக்கல் போன்றவை – சிக்கலின் அறிகுறிகள்.

இதன் காரணங்கள்:

தவறான உணவுமுறை, நார்சத்து குறைவான உணவு முறை
மலம் கழித்தலில் குறிப்பிட்ட நேரத்தை பழக்காமை
குடல் அடைப்பு
பெருங்குடல் புற்று நோய்
தைராய்டு குறைவு
மலவாய் பாதிப்பு போன்றவற்றினால் மலச் சிக்கல் ஏற்படலாம்.

மலச்சிக்கலுக்கு உணவு முறைகள்

மூலநோய்க்கு முக்கிய காரணமே மலச்சிக்கல். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் உண்டாகின்றன. அதைத் தவிர்க்க சில அடிப்படைகளைக் கையாள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை :

காரமான உணவுகள் (மிளகு, மிளகாய்)
காரம் மற்றும் மசாலா பொருட்கள் கலந்த உணவு வகைகள்
பச்சை மிளகாய், மிளகு, இஞ்சி, காரம், மசாலா
குளிர்பானங்கள்
புளிப்பான உணவுகள்
மைதாவில் செய்த உணவுகள்

மேலும் நாள்தோறும் உடற்பயிற்சி, யோகா, பிராணயாமம் போன்றவற்றை செய்வோருக்கு மலச்சிக்கல் உண்டாவதில்லை.

மலச்சிக்கலுக்கு நலம் தரும் நார்ச்சத்து

பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள், கொட்டைகள், விதைகள் மற்றும் கிழங்குகள் போன்றவற்றில் அவற்றிற்கு உருக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ள சத்துப்பொருளே, நார்ப்பொருளாகும்.

இந்த நார்ப்பொருள்கள் உடலுக்குள் சென்று நம் உடலிலுள்ள கழிவுகள் வெளியேறப் பெரிதும் உதவுகின்றன. மேலும் குடல் நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. தினமும் ஒரு நேரமாவது கண்டிப்பாக பழங்களைச் சாப்பிடுதல் நன்று. காலையில் காபிக்குப் பதிலாக எலுமிச்சம் பழம் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்துப் பருகலாம்.

கோதுமையை அதிகம் சேர்த்தல், கோதுமை ரவையால் செய்யப்பட்ட உப்புமா, கோதுமை குருணையால் தயாரிக்கப் பட்ட சோறு ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

அனைத்து கீரைகளிலும், கறிவேப்பிலை, கொத்து மல்லித்தழையிலும் நார்ச்சத்து நிரம்ப உண்டு. இவைகளை நாள்தோறும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ், பார்லி, பாசிப்பயறு, கொள்ளு, காரா மணி, கம்பு, சோளம், ராகி ஆகியவைகளையும் அடிக்கடி சேர்த்தல் நல்லது.

ஆப்பிள், கொய்யா, மாம்பழம், சப்போட்டா, ஆரஞ்சுச்சுளை போன்ற பழங்களைத் தோலுடன் சேர்த்துச் சாப்பிடுதல்.

கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், தக்காளி, வெங்காயம், கொத்துமல்லி, புதினா, வெள்ளரி பீன்ஸ் போன்ற பச்சை காய்கறிகளை சாலட் செய்து சாப்பிட்டால் நார் சத்து அதிகமாக கிடைக்கும்.

அதிகம் தீட்டாத உணவு தானியங்கள் குடலுக்கு நல்லது.

அடிக்கடி தண்ணீர் குடித்தல், இளநீர், குளுக்கோஸ், மோர், ரசம், நுங்கு, தர்பூசணி போன்ற வற்றாலும் மலச்சிக்கல் குறையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply