ரவா பாயசம்

Loading...

ரவா பாயசம்ரவை – ஒன்றரை ஆழாக்கு
பால் – ஒன்றரை கப்
சர்க்கரை – ஒன்றரை ஆழாக்கு
முந்திரிப் பருப்பு – 15
உலர்ந்த திராட்சை – 15
நெய் – 5 தேக்கரண்டி
ஏலக்காய் – 6
குங்குமப்பூ – சிறிது
கேசரிப்பவுடர் – சிறிது

ரவையை தூசியில்லாமல் சலித்து, சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் ரவையைப் போட்டு பொன்னிறமாக வறுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
பாலுடன் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, கேசரிப்பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலக்கி ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
ரவை வெந்ததும் சர்க்கரையை கொட்டிக் கிளறி, அதனுடன் முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து போட்டுக் கிளறவும்.
பிறகு ரவையுடன் பாலை ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைத்து விட்டு இறக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply