மைசூர் பாகு

Loading...

மைசூர் பாகுகடலை மாவு – 200 கிராம்
சர்க்கரை – 600 கிராம்
நெய் – 600 கிராம்

கடலை மாவை நன்றாக சலித்து கொள்ள வேண்டும். பெரிய வாணலியை அடுப்பில் வைத்து திட்டமாக தண்ணீர் விட்டு சர்க்கரையைச் சேர்த்து பாகாக காய்ச்சி கம்பி பதம் வரவேண்டும்.
பாகு கம்பி பதமாக வருவதற்கு ஒரு நிமிடம் முன்னதாகவே மாவைச் சிறிது சிறிதாகக் கொட்டி கைபடாமல் கிளறி கொண்டேயிருக்க வேண்டும்.
பாகு மாவு நன்றாக கலந்த நிலையில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். கிளறும் போது தூள் அடிபக்கமிருந்து நுரைத்துக் கொண்டு வரும். அதுதான் நல்ல பக்குவம். அப்போது பாகை இறக்கி நெய் தடவி சமமான தாம்பாளத்தில் கொட்டி சமமாக பரப்பி விட வேண்டும்.
ஆறிய பிறகு பாகை வேண்டிய அளவுக்குத் துண்டு துண்டாக வெட்டவும். மைசூர்பாகு மிகவும் மிருதுவாக இருக்க வேண்டுமானால் மாவில் அளவைவிட சர்க்கரை, நெய் ஆகியவற்றின் அளவு மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

Loading...
Rates : 0
VTST BN