மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்யும் Microsoft Lumia 950 XL

Loading...

மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்யும் Microsoft Lumia 950 XLநோக்கியா நிறுவனத்தினை வாங்கிய பின்னர் மைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது பெயருடன் கூடிய பல்வேறு ஸ்மார்ட் கைப்பேசிகளை இதுவரை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது Microsoft Lumia 950 XL எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

5.7 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Octa Core Qualcomm Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பனவற்றுடன் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3340 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply