மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்யும் மற்றுமொரு கைப்பட்டி

Loading...

மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்யும் மற்றுமொரு கைப்பட்டிமைக்ரோசொப்ட் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை ஒழுங்குபடுத்தியிருந்தது.
இதன்போது தமது நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள டேப்லட்கள், ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் கைப்பட்டி போன்றன தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தது.

இதன்படி அந்நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் Microsoft Band 2 ஆனது 320 x 128 Pixel Resolution உடையதும் OLED தொழில்நுட்பத்துடன் கூடிய Gorilla Glass 3 தொடுதிரையினைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 48 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலம், Optical heart, rate sensor, 3-axis accelerometer, Gyrometer, GPS, Ambient light sensor, Skin temperature sensor, UV sensor, Capacitive sensor, Galvanic skin response, Microphone, Barometer போன்றவற்றிற்கான சென்சார்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

தவிர இச் சாதனமானது விண்டோஸ் 8.1, iOS 8.1.2, Android 4.4 போன்றவற்றிற்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களுடன் இணைந்து செயற்படக்கூடியது.

இதன் விலையானது 249.99 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply