மென்மையான சருமத்திற்கு…

Loading...

மென்மையான சருமத்திற்கு...மஞ்சள் தூள், சந்தனப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணை கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

* பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது.

* அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல்லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது.

* வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம் “ஷவரில்” நிற்பது சருமத்துக்கு நல்லது. குளித்த பிறகு துண்டை வைத்து முரட்டுத்தனமாக உடம்பை துடைக்கக் கூடாது. மென்மையாக உடம்பின் மீது துண்டை ஒற்றி எடுக்க வேண்டும்.

* வைட்டமின் “ஏ” மற்றும் “சி” அதிகமுள்ள உணவை உண்டு வந்தால் சருமத்துக்கு நல்லது.

* கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.

* பாலும், எலுமிச்சை சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் “பிளீச்” செய்யலாம்.

* வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்தே குளிக்க வேண்டும்.

* கடுகு எண்ணையை உடலில் பூசி 5 நிமிடங்களுக்குத் தேய்க்க வேண்டும். அதற்குப் பிறகு கடலை மாவு அல்லது சோப்பை உபயோகித்துக் குளிக்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply