முந்திரி பக்கோடா

Loading...

முந்திரி பக்கோடாமுந்திரிப்பருப்பு – 150 கிராம்
பொட்டுக்கடலை – 3 கப்
அரிசிமாவு – ஒரு கப்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – சிறு துண்டு
வெங்காயம் – 2
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
நெய் – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து இரண்டு கப் அளவிற்கு மாவு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் அரிசி, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழைச் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
நெய்யை உருக்கி ஊற்றி, சிறிது தண்ணீரும் தெளித்து (தண்ணீர் அதிகம் விடக்கூடாது) நன்கு பிசைந்து கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உடைத்த முந்திரி ஆகியவற்றைப் போட்டு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் கொதித்தவுடன், அதில் மாவினை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
வெங்காயம் சேர்க்காமலும் இதனை செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply