முந்திரிப் பருப்பு பாயசம்

Loading...

முந்திரிப் பருப்பு பாயசம்முந்திரிப் பருப்பு – 100 கிராம்
பால் – 600 மில்லி
திராட்சை – 10 கிராம்
சர்க்கரை – 250 கிராம்
ஏலக்காய்ப் பொடி – அரை தேக்கரண்டி
பச்சைக் கற்பூரம் – மிகச்சிறிய துண்டு
கிராம்பு – 2

முந்திரிப் பருப்புடன் சிறிது பால் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸில் முந்திரி பருப்பை போட்டு மைப்போல் அரைத்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டியாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் முந்திரிப் பருப்பு கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து, அடிப்பிடிக்காமல் கிளறவும்.
முந்திரி பருப்பு கெட்டியாக வரும் சமயத்தில் நெய்யில் வறுத்த திராட்சை, கிராம்பு, சர்க்கரை மற்றும் பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
இறுதில் அதனுடன் காய்ச்சிய பாலை ஊற்றி பாத்திரத்தை இறக்கி வைத்து சுடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply