முத்து முத்தாக பருக்கள் உள்ளதா?

Loading...

முத்து முத்தாக பருக்கள் உள்ளதாபருக்கள் தோன்றுவதற்கே முகத்தில் அதிகளவில் எண்ணெய் சுரப்பதுதான் காரணம். இதைத் தடுக்கவும் பருக்களை விரட்டவும் சில ஆலோசனைகள்….

துண்டுகளாக்கிய வெட்டிவேரை தண்ணீரில் கொதிக்கவிட்டு, அந்த நீரினால் முகத்தை கழுவுங்கள். இது, முகத்தில் வடியும் அதிகப்படியான எண்ணெயை எடுத்து பருக்கள் மீண்டும் வராமல் தடுக்கும். புதினா, கொத்தமல்லி ஜூஸாலும் முகத்தை அலம்பலாம்.

டால்கம் பவுடரை பயன்படுத்தக் கூடாது. அப்சார்ப் (Absorb) என்ற பவுடரை (மருந்து கடைகளில் கிடைக்கும்) பயன்படுத்துங்கள். இது எண்ணெய் பசையை எடுத்துவிடும்.

அக்னில் (Acnil) என்ற மருத்துவ சோப்பை மட்டும் பயன்படுத்துங்கள். இது பருக்களால் ஏற்படும் அரிப்பை போக்கும்.

அரிப்பு ஏற்படும்போதெல்லாம் தயிரினால் முகத்தை அலம்பிவிட்டு, ஐஸ் கட்டிகளால் ஒத்தி எடுங்கள் எரிச்சல் கட்டுப்படுவதோடு பருக்களும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குளிர்ந்த நீரினால் முகத்தை அலம்புங்கள். அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். முகத்தை தொடும்போதெல்லாம் கைகளை நன்றாக அலம்பிய பிறகே தொடவேண்டும். நகம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடலை பருப்பை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொண்டு, தினமும் குளிக்கும்போது இந்த மாவை முகத்துக்கு பூசி அலம்புங்கள் தோல் மிருதுவாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply