முட்டை காய்கறி அடை

Loading...

முட்டை காய்கறி அடைமுட்டை – 4
பீன்ஸ் – 4
முட்டைக்கோஸ் – 50 கிராம்
காரட் – அரை
சிறிய குடமிளகாய் – அரை
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 4
மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
பால் – 3 மேசைக்கரண்டி

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையில் பால் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், நறுக்கிய காய்கறிகளையும் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின் மிளகுத் தூள் தூவி வதக்கி அரை வேக்காடு வெந்தவுடன் முட்டைக் கலவையில் கலந்து வைக்கவும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து முட்டைக் கலவையை சிறிய அடை போல் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். சுடச்சுட பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply