முட்டை கபாப்

Loading...

முட்டை கபாப்முட்டை – 8
தேங்காய் துருவல் – முக்கால் கப்
பூண்டு – ஒன்று
சின்ன வெங்காயம் – 10
புளி – தேவைக்கு
இஞ்சி – ஒரு துண்டு
மல்லித்தழை – தேவைக்கு
நல்லெண்ணெய் – அரை லிட்டர்
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
ரொட்டித்தூள் – தேவைக்கேற்ப
முட்டை (அடித்து கலக்கியது) – 2

முதலில் 8 முட்டைகளை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவல், பூண்டு, வெங்காயம், புளி, மல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைக்கவும்.
அத்தோடு எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். முட்டையை துண்டுகளாக்கி அதில் அரைத்த மசாலாவை புரட்டிக்கொள்ளவும்.
ஒவ்வொரு துண்டு முட்டையையும் முட்டை கலவையில் நனைத்து எடுத்து, ரொட்டித்தூளில் புரட்டி கட்லெட் போல் பொரித்து எடுக்கவும்.
பொரிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply