முட்டைகோஸ் சூப்

Loading...

முட்டைகோஸ் சூப்தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் 250 கிராம்
வெள்ளை பூசணிக்காய் : 250 கிராம்
வெங்காயம் : 3
உருளைக்கிழங்கு : 2
சோள மாவு : தேவைகேற்ப
வெண்ணெய் : 1 தே‌க்கர‌ண்டி
உப்பு, மிளகுத்தூள் : தேவைகேற்ப

செய்முறை:

முதலில் கா‌ய்க‌றிகளை பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ள வேண்டு‌ம். பிறகு வாண‌லி‌யி‌ல் வெண்ணெயை போ‌ட்டு அடுப்பில் வைத்து, ‌சி‌றிது சோ‌ம்பு சே‌ர்‌த்து தா‌ளி‌க்கவு‌ம்.

‌பிறகு பொடியாக நறு‌க்‌கிய முட்டைகோஸ், பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவைகளை போ‌ட்டு ந‌ன்கு வத‌க்கவு‌ம்.

‌பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் வேக விடவும். ந‌ன்கு வெ‌ந்தது‌ம், ‌சி‌றிது சோள மாவை த‌ண்‌ணீ‌ரி‌ல் கரை‌த்து சூ‌ப்‌பி‌ல் ஊ‌ற்‌றி ‌கிள‌றி ‌விடவு‌ம்.

ச‌‌ரியான அள‌வி‌ற்கு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, கொ‌த்தும‌ல்‌லி தூ‌வி சூடாக பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply