முடி உதிர்வதை தடுக்கும் எலுமிச்சை

Loading...

முடி உதிர்வதை தடுக்கும் எலுமிச்சைசிலருக்கு சீப்பை எடுத்து தலை வாரினாலே… வேர்க்காலுடன் முடி கொத்து கொத்தாக உதிரும். தலைக்குப் போதிய அளவு புரோட்டீன் சத்து கிடைக்காததே இதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்களின் மனக்கவலையை போக்க எலுமிச்சையால் முடியும். ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து நன்றாக கலக்குங்கள்.

இந்தக் கலவையை தலையில் பூசி, காய்ந்ததும் ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்.. வாரம் ஒருமுறை இப்படிக் குளித்து வர, முடி உதிர்வது நின்று, கருகருவென்று வளரத் தொடங்கும். சீயக்காயுடன் எலுமிச்சை தோலையும் சேர்த்து அரைத்து பயன்படுத்தினால், கூந்தல் பளபளவென்று மின்னும்.

அந்தச் சீயக்காய் பொடி தயாரிக்கும் முறை இதுதான்…

1 கிலோ சீயக்காயுடன், உலர்ந்த எலுமிச்சை தோல்- 50 கிராம், முழு பயறு – கால் கிலோ, வெந்தயம் – கால் கிலோ, பூலான் கிழங்கு – 100 கிராம், வெட்டிவேர்- 10 கிராம்… இவற்றை சேர்த்து அரைத்துக் கொள் ளுங்கள். வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து, இந்தப் பொடியைப் போட்டு அலசுங்கள். கூந்தல் மிருதுவாக மாறுவதோடு, பளபளவென மின்னும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply