முக அழகை கெடுக்கும் வடு சிகிச்சை செய்தால் தீர்வு கிடைக்கும்

Loading...

முக அழகை கெடுக்கும் வடு சிகிச்சை செய்தால் தீர்வு கிடைக்கும்“இளம் வயதினருக்கு ஹார்மோன் வளர்ச்சி காரணமாக முகத்தில் எண்ணெய் சுரப்பு ஏற்படுகிறது. அதில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பருக்கள் உருவாகிறது
வளர் இளம் பருவத்தில் சாதாரணமாக தோன்றும் முகப்பருவை கவனிக்காமல் விட்டால் அது முகத்தில் வடுக்களை உருவாக்கி முக அழகை கெடுத்து விடுகிறது. முகப்பரு உண்டாவதற்கு பல காரணங்கள் உள்ளன. எண்ணெய் சுரப்பிகள் மற்றும் எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு வரும் வாய்ப்புகள் அதிகம்.

இதில் இளம் வயதினருக்கு ஹார்மோன் வளர்ச்சி காரணமாக முகத்தில் எண்ணெய் சுரப்பு ஏற்படுகிறது. அதில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பருக்கள் உருவாகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பருக்கள் தழும்புகளாக மாறி முக அழகை கெடுத்து விடும்.

முகப்பருவை அகற்றவும், அதனால் ஏற்பட்ட முக அழகு பாதிப்பை சீராக்க அதிநவீன சிகிச்சை உள்ளது. இச்சிகிச்சை மருந்தானது, பழங்களில் இருந்து பெறப்பட்ட சாறு மற்றும் பல்வேறு வைட்டமின்களை கொண்டது. இதை வெளிப்பூச்சாக பூசும்போது முகப்பருக்கள் அகல்வதுடன், வடுக்கள் வராமல் தடுத்துவிடும். முகத்தின் சருமம் மிருதுவாகும்.

இந்த வெளிப்பூச்சு மருந்தை பரு உள்ள முகத்தில் பூசும்போது அது தோலின் மேல் அடுக்கில் உள்ள இறந்த செல்களை அகற்றிவிடும். அதோடு தோலின் உள்ளே ஊடுருவி, தோலின் அடியில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை சுருங்க செய்து விடும். இதனால் எண்ணெய் வழிவது குறையும். பருக்களும் வராது. முகம் புதுப்பொலிவு பெற்று பளபளப்பாகிவிடும்.

இந்த வெளிப்பூச்சு மருந்தை பரு உள்ள முகத்தில் பூசும்போது அது தோலின் மேல் அடுக்கில் உள்ள இறந்த செல்களை அகற்றிவிடும். அதோடு தோலின் உள்ளே ஊடுருவி, தோலின் அடியில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை சுருங்க செய்து விடும். இதனால் எண்ணெய் வழிவது குறையும். பருக்களும் வராது. முகம் புதுப்பொலிவு பெற்று பளபளப்பாகிவிடும்.

இச்சிகிச்சை முறை அலோபதி மருத்துவமாகும். ஆனால் கெமிக்கல் சம்பந்தப்பட்ட சிகிச்சையல்ல. இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. வலி ஏற்படாது. ஒரு திரவம் போன்று இருக்கும் இந்த மருந்தை முகத்திலும், பருக்கள் உள்ள இடத்திலும் 15 நாட்களுக்கு ஒரு முறை பூசினால் போதும். முகப்பருவின் தன்மை, பாதிப்பிற்கேற்ப 3 அல்லது 4 முறையே முகப்பரு பிரச்னை தீரும் வரையோ இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரின் முகத்திற்கேற்ப, தோலின் தன்மைக்கேற்ப தனித்தனியான மருந்து பூச்சு உள்ளது. இச்சிகிச்சையால் முகப்பரு, வடுக்கள் மட்டுமல்ல முகத்தில் திட்டு, திட்டாக உள்ள சரும நிற வேறுபாடுகளும் அகன்றுவிடும். முக சுருக்கமும் நீங்கி இளமை தோற்றம் கிடைக்கும். முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்கள், பருவோடு முகத்தில் முடி உள்ளவர்கள் தோல் சிகிச்சை நிபுணர் மற்றும் கைனகாலஜி மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்

Loading...
Rates : 0
Loading...
VTST BN