முகம் மிருதுவாக… | Tamil Serial Today Org

முகம் மிருதுவாக…

Loading...

முகம் மிருதுவாக...எப்படி இந்த புது மெருகு?

கமலா ஆரஞ்சு தோல் அரைத்த விழுது – 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை தோல் அரைத்த விழுது – 1 டேபிள் ஸ்பீன், பீட்ரூட் சாறு – 1 டேபிள் ஸ்பூன், பாதாம் அரைத்த விழுது – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை

இவற்றுடன் 5 துளிகள் ஜாஸ்மின் (அ) பாதாம் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை முகத்திலும் உடம்பு முழுக்கவும் நன்றாகப் பூசி, குளித்தால்…. முரடு தட்டிப் போன முகம் மிருதுவாகும். உடம்பும் நறுமணத்துடன் பளபளக்கும்.

* முகத்தில் வரிகள் விழுகின்றனவா? கவலையே வேண்டாம். இதோ அருமையான ஃபேஸ் பேக்!

பீட்ரூட் அரைத்த விழுது – ஒரு டேபிள் ஸ்பூனுடன், ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் பளிங்கு போல் பிரகாசமாகும்.

* முகத்தில் கன்னிப் போன பகுதி, கரும்புள்ளிகளை நீக்க ஆவி பிடிக்கலாம்.

வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பதை விடவும், சில பொருட்களை போட்டு ஆவி பிடிப்பது நல்ல பலனைத் தரும். இரண்டு வகைகளில் முயற்சித்துப் பாருங்கள்.

வேப்பிலை ஸ்டீம்:

வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நாலைந்து வேப்பிலையைப் போடுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து வேப்பிலையை எடுத்துவிட்டு ஆவி பிடியுங்கள். பிறகு, முகத்தைத் துடைக்காமல், ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி, முகம் முழுக்க லேசாக ஒத்தி எடுங்கள்.

இதனால் முகம் குளிர்ச்சியாவதுடன், கன்னிப் போன தோல் மிருதுவாகும். அரிப்பு, பருக்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் நிரந்தரமாக விடுபடலாம்.

எலுமிச்சை ஸ்டீம்:

கொதிக்கிற தண்ணீரில், 1 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஆவி பிடியுங்கள். முடித்ததும் முகத்தைத் துடைக்காமல், ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுங்கள். பிறகு, ஏடு இல்லாத தயிருடன் கடலைமாவை கலந்து பேக் போட்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

மாதம் ஒருமுறை இதைச் செய்து வந்தாலே முகத்தில் வந்த சுருக்கம் ஓடிப் போகும். இனி, சுருக்கமும் வராது. எலுமிச்சைக்கு, முகத்தின் கருமையையும் கரும்புள்ளிகளையும் விரட்டி விடுகிற சக்தி உண்டு.

Loading...
Rates : 0
VTST BN
ads