முகம் அழகாய் ஜொலிக்க!

Loading...

முகம் அழகாய் ஜொலிக்க!முகத்தை முதலில் ஆரஞ்சு சாறு கொண்ட காட்டன் துணியின் உதவியால் துடைக்க வேண்டும்.

பிறகு பச்சை அரிசி மற்றும் மகிழம்பூவை, கொளகொளவென்று பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அந்த பொடியை முகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு தக்காளி, வாழைப்பழம், ஆரஞ்சுச்சாறு, ஸ்ட்ராபெரி, ஆப்பிள் கூழ் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படிச்செய்தால் முகம் பளிச்சென மாறுவதை உணர்வீர்கள்.

கோடை காலத்தில் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரவும். இதனால் மேனி மினுமினுப்பாக மாறும்.

வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர முகம் மிகவும் பிரகாசமாய் ஜொலிக்கும்.

அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பிறகு வெல்லம் சேர்த்து பருகி வர உடல் அழகும் முக அழகும் மிளிரும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply