மிருதுவான முகம் பெற..

Loading...

Watchful woman December 2001

வெயிலால் அதிகம் பாதிக்கப்படும் மற்றுமொரு உறுப்பு இது. கறுத்துப் போதல், கரும்புள்ளிகள் வருதல். வறண்டு விடுதல் என்று பலவகையில் முகச் சருமம் கோடையால் அவதிக்குள்ளாகிறது. இதனால் கலையிழந்து போகிறோம். வெயில் பிரச்னையிலிருந்து வெற்றிகரமாய் மீள இந்த குறிப்புகள் உதவும்.

1. ஒரு முட்டையில் சிறிது “வைட்டமின் ஈ” எண்ணெய். ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, நன்கு கலக்கி முகத்தில் பூசிக் காய விடவும். பிறகு கழுவினால் முகம் ஆரோக்கிய பளபளப்புடன் திகழும். வெயிலில் அலைந்ததால் ஏற்பட்ட நிறமங்கலும் இதனால் நீங்கும். இந்த ஃபேஸ் மாஸ்க் மிகவும் சத்தானதாகும்.

2. தக்காளிச் சாற்றில் சிறிது ரவையைக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்கு தேய்த்து ஊறவிடவும். இது ஓர் அருமையான ஃபேஸ் ஸ்கரப் (Face Scrob) ஆகும். இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் விளங்கும்.

3. சிறிது கசகசாவையும் வெந்தயத்தையும் பாலில் ஊறவிட்டு கரகரப்பாக அரைத்து முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்தால் கரும்புள்ளிள் மற்றும் ஒய்ட் ஹெட்ஸ் சுலபமாக வெளிவந்துவிடும்.

4. ஒரு முட்டையை உடைத்து நன்கு கலக்கி அதில் சிறிது யூடிகோ லோசனையும் சேர்த்து உங்கள் முகம் மற்றம் கழுத்துப் பகுதியில் பூசிக் காய விடவும். கண்களைச் சுற்றிப் பூச வேண்டாம். இக்கலவை நன்கு காய்ந்த பின் கழுவி முகத்தைத் துடைக்கவும். சருமம் வெயிலால் பாதிப்படையாமலிருக்க இது உதவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply