மாரடைப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்..

Loading...

மாரடைப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்..1 . பெயர்: மாரடைப்பு (myocardial infarction)
2 .தோற்றம்: இதயத் தொழிற்பாடு பாதிப்படைதல்
3 . காரணம்:
பிராணவாயு, குளுக்கோஸ் என்பன இதயத்தசையை அடையவிடாது பாதிப்படைவதால்..
4 . காரணிகள்:
* பரம்பரையில் இந்நோய் உடையவர்களைத் தாக்கும்
* பால் அடைப்படையில் பெண்களை விட ஆண்களுக்கு இந்நோய் வர வாய்ப்புகள் அதிகம்
* வயது கூடக்கூட நாடிச்சுவர் விறைப்பு சுவர்களின் உட்புற கொழுப்பின் ஆவு கூடுவதால்..
* கீழைத்தேயத்தவர்கள் உணவில் கொழுப்பு அதிகம் சேர்ப்பதால்
* நீரிழிவு வியாதி உடையவர்களுக்கு
5. அறிகுறிகள்:
* நெஞ்சை இறுக்குவது போன்ற வலி
* மூச்சுக் கஷ்டம்
* மயக்கம்
* வாந்தி
* களைப்பு
* உடல் வெளிறல்
* குருதி அமுக்கம் குறைதல்
* வியர்த்தல்
* இதயத்துடிப்புக் கூடல்
* நாடித்துடிப்பு கனவளவு குறைதல்
* சிறுநீர் குறைதல்
* 20 சதவிகிதத்தினருக்கு இவற்றில் எந்தக் குறி குணமும் ஏற்படாது
6 . உபத்திரவங்கள்:
* இதயத்துடிப்பு ஒழுங்கு விலகல்
* இதயம் சார் அதிர்ச்சி
* குருதி கட்டிபடுதல் தொடர்பான பிரச்சினைகள்
* இதயம் கிழிதல்
* தீவிர இதயப் புறவணி அழற்சி
* நாட்பட்ட இதயப்பாதிப்பு
* இதயம் பெருத்தல்
* மீளவும் இதயத்தசை இறத்தல்
7 . சோதனைகள்:
* குருதிப் பரிசோதனை மூலம்
* இதய மின் அலை வரைபுப் பரிசோதனை
* எக்ஸ்கதிர் பரிசோதனை
8 . தடுக்கும் வழிகள்:
* உடற்பருமனை உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மூலம் குறைத்தல்
* புகைப்பிடித்தலை நிறுத்துதல்
* மன அழுத்தத்தைக் குறைத்தல்
* கொழுப்பு, கார்போஹைட்ரேட் அற்ற உணவு வகைகளை உண்ணல்
* சொகுசான வாழ்க்கையைத் தவிர்த்தல்

Loading...
Rates : 0
VTST BN