மாம்பழ அல்வா

Loading...

மாம்பழ அல்வாமாம்பழத் துண்டுகள் – 3 கப்
சர்க்கரை – ஒரு கப்
பால் – 2 கப்
நெய் – அரை கப்
ஏலப்பொடி – கால் தேக்கரண்டி

மாம்பழம் நல்ல சுவையானதாய், கனிந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மாம்பழத் துண்டுகளை நன்கு மசித்துக் கொள்ளவும்.
மசித்த மாம்பழத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சர்க்கரையும், பாலையும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
சர்க்கரை பாகாக கரைந்து, மாம்பழத் துண்டுகளுடன் சேர்ந்து கலவையாய் வரும்போது, ஏலப்பொடி சேர்த்து, நெய்யை ஊற்றி கிளற வேண்டும்.
அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கி ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி, ஆறியபிறகு துண்டுகளாய் வெட்டவும்.

Loading...
Rates : 0
ads
VTST BN